×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நா.த.க-வில் அடுத்த சம்பவம்.. பதவி விலகினார் மா.செ.. அதிர்ச்சியில் சீமான்.!

நா.த.க-வில் அடுத்த சம்பவம்.. பதவி விலகினார் மா.செ.. அதிர்ச்சியில் சீமான்.!

Advertisement

சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலரும் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து பல குற்றசாட்டுகளை முன்வைத்து அவர்கள் விலக தொடங்கியுள்ளனர். சமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தங்களின் பொறுப்புகளில் இருந்து விலகப்போவதாகவும் அறிவித்தனர். 

இதனிடையே, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், தனது பொறுப்புகளில் இருந்து விளங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விழுப்புரம்‌ வடக்கு மாவட்ட பொறுப்பில்‌ இருந்து விலகுகிறேன்‌. நாம்‌ தமிழர்‌ கட்டியில்‌ கடந்த 9 ஆண்டுகளாக என்னால்‌ முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும்‌ சிறப்பாக செய்தேன்‌. 2015 இல்‌ முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 தொகுதி செயலாளர்‌ ஆகவும்‌ 2020 இல்‌ விழுப்புரம்‌ வடக்கு மாவட்ட செயலாளர்‌ ஆகவும்‌ மற்றும்‌ 2021 சட்டமன்ற தேர்தலில்‌ வேட்பாளராகவும்‌ இருந்தோம்‌.

சிறப்பாக செயல்பட்டோம்

இரண்டு நாடாளுமன்றத்‌ தேர்தல்‌ இரண்டு சட்டமன்றத்‌ தேர்தல்‌ ஒரு உள்ளாட்‌சித்‌ தேர்தல்‌ என அனைத்து தேர்தலிலும்‌ நாம்‌ சிறப்பாக வேலை செய்தோம்‌. அதேபோல உள்ளாட்‌சித்‌ தேர்தலில்‌ கட்‌சி சின்னத்தில்‌ போட்டியிட்ட அனைத்து இடங்களிலும்‌ 100% வேட்பாளரை நிரப்பினோம்‌. கட்‌சியின்‌ கிளை பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம்‌ கையொப்பமும்‌ வாங்‌கினோம்‌. மாவட்டத்தின்‌ சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்‌ 

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் ஆணுறுப்பை நசுக்கி சித்ரவதை; நா.த.க பிரமுகர் உட்பட 6 பேர் அதிர்ச்சி செயல்.!

இது நாள்‌ வரை நாம்‌ செய்த செயல்கள்‌, உடல்‌ உழைப்பு மற்றும்‌ பண விரயம்‌ இவை எவையும்‌ அவர்‌ பொருட்படுத்தும்‌ படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும்‌ சமம்‌, 

சீமானின் பேச்சு

அண்ணன்‌ கூறியது : இந்த தொகுதியில்‌ உள்ள எவருக்கும்‌ நான்‌ பதில்‌ சொல்ல முடியாது மற்றும்‌ நீங்கள்‌ என்னிடம்‌ கேள்வியும்‌ கேட்க கூடாது என்‌ இஷ்டப்படி தான்‌ நான்‌ செய்வேன்‌. நீங்கள்‌ இருந்தால்‌ இருங்கள்‌ இல்லாவிட்டால்‌ கிளம்புங்கள்‌. உங்களை யாரும்‌ போஸ்டர்‌ ஒட்டவும்‌ சொல்லவில்லை செலவு செய்யவும்‌ கூறவில்லை என்று கூறினார்‌. ஒன்றுக்கு இருமுறை பேசியும்‌ நான்‌ செய்வது தான்‌ செய்வேன்‌. நீங்கள்‌ இருந்தால்‌ இருங்கள்‌ இல்லாவிட்டால்‌ கிளம்புங்கள்‌ என்று கூறியதன்‌ அடிப்படையில்‌, 

மனவிரக்தி

அண்ணா நாங்கள்‌ உங்களிடம்‌ கேட்டது பணமோ பொருளோ அல்ல.
எங்களுக்கான மரியாதை மற்றும்‌ எங்களுக்கான அங்‌கீகாரம்‌. இதுவே உங்களால்‌ தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கின்றேன்‌. நாம்‌ தமிழர்‌ கட்சியில்‌ இருந்து அனைத்து பொறுப்புகள்‌ மற்றும்‌ அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன்‌. இதுநாள்‌ வரை என்னுடன்‌ பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும்‌ மற்றும்‌ உறவுகளுக்கும்‌ என்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌ இப்படிக்கு என்றும்‌ உங்கள்‌ சுகுமார்" என கூறியுள்ளார். 

கட்சிக்குள் நடந்த பிரச்சனையால் அடுத்தடுத்து சீமான் மிகப்பெரிய தலைவலியை சந்தித்து வருகிறார். இந்த பிரச்சனைகள் அனைத்தும் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் தெரியவருகிறது.

இதையும் படிங்க: 13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை; கோவையில் பகீர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NTK #tamilnadu #Viluppuram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story