தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து.. நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது.!
தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து.. நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செல்லியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் காளியப்பன். 27 வயதான இவர் நாம் தமிழர் கட்சிக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் ஆதரவு கொடுத்து வருகிறார். அதன்படி திமுக மீது அவதூறு கருத்துகளை பதிவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை இழிவுபடுத்தும் வகையில் கார்ட்டூன் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் சமூக வலைதள பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பதிவு செய்தது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியப்பன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தர்மபுரிக்கு விரைந்து சென்று முதல்வர் குறித்து அவதூறு பதிவு வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் காலிப்பனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் அவரது சமூக வலைதள பக்கத்திலிருந்து அவதூறு பதிவுகளையும் போலீசார் நீக்கி உள்ளனர்.