சம்மனை இங்கே ஒட்டிச் செல்லுங்கள் - சீமான் வீடு முன் பிரத்தியேக பதாகை.!
சம்மனை இங்கே ஒட்டிச் செல்லுங்கள் - சீமான் வீடு முன் பிரத்தியேக பதாகை.!

சென்னையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில், நேற்று வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டி சம்மன் வழங்கிச் சென்றனர். சம்மன் வீட்டின் கதவில் ஒட்டப்பட்டது.
சம்மன் வழங்கப்பட்ட சில நிமிடங்களில் அவை கிழித்து எறியப்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த நீலாங்கரை அதிகாரிகள், சம்மனை கிழித்தவர்களிடம் விளக்கம் கேட்க முற்பட்டனர்.
இதையும் படிங்க: சிக்கப்போகும் சீமான்? முக்கிய ஆதாரத்தை கொடுத்த நடிகை.. 7 மணிநேரம் விசாரணை.!
அப்போது, சீமான் வீட்டு காவலாளி - காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். சீமானின் வீட்டு உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, இன்று வளசரவாக்கம் காவல்துறையினரைத் தொடர்ந்து, ஈரோடு காவல் துறையினர் சம்மன் வழங்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீமானின் வீட்டு முன்பு சம்மன் ஒட்ட பிரத்தியேக பலகை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, நாதக வேட்பாளர் சீதாலெட்சுமியை ஆதரித்து சீமான் பிரச்சாரக்கூட்டத்தில் பேசும்போது, ஈரோடு வெங்காயத்தை நீ (திமுகி & பெரியாரிஸ்டுகளை குறிப்பிட்டு) வீசுவேன் என பேசினால், நான் தலைவன் பிரபாகரனின் வெடிகுண்டை வீசுவேன். புல் கூட முளைக்காது என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாதக-வில் இருந்து விலகுகிறார் காளியம்மாள்? சீமான் அளித்த ஷாக் பதில்.!