பள்ளியில் படிக்கும்போது இறந்த தோழி அடிக்கடி ஆவியாக வந்து தொந்தரவு! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!
nurse commit suicide
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலைநகர், ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் நந்தினி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நந்தினி திடீர் என்று வாயில் நுரை தள்ளி, மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நந்தினியை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செவிலியர் நந்தினி அறையில் விஷம் ஏற்றப்பட்ட ஊசி ஒன்று கிடந்ததால், நந்தினி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
தற்கொலைக்கு முன்பாக நந்தினி, தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அவர், தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. தனது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்யவேண்டும் அது தான் எனது ஆசை என எழுதிவைத்துள்ளார்.
நந்தினி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில் அவரது பெற்றோர் கூறுகையில் நந்தினி 9ம் வகுப்பு படிக்கும் போது அவருடைய தோழி இறந்துவிட்டார். அவர் அடிக்கடி தன்னை அழைப்பதாக நந்தினி எங்களிடம் கூறியுள்ளார். அதன்காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.