நீதிமன்ற உத்தரவை மீறி, திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி.! மூன்று பேர் கைது.!
நீதிமன்ற உத்தரவை மீறி, திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி.! மூன்று பேர் கைது.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கோவில் திருவிழாவின் போது நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் இடம் பெற்றதால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள இடும்பாவனம் கிராமத்தில் உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 23ஆம் தேதி இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆபாச நடனங்கள் இடம் பெற்றதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கோவை அம்மன்நகர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நடன கலைஞர் நல சங்க மாநில தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித் ராஜா என்பவர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இணையதளம் மூலம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் நீதிமன்ற உத்தரவை மீறி கோவில் திருவிழாவில் ஆபாச ஆடல் பாடல் நடைபெற்றதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இடும்பாவனம் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாகி கண்ணையன்(65) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வேதாரண்யத்தை அடுத்துள்ள கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத்(31) மற்றும் ஆபாச நடனம் ஆடிய நாமக்கல் அருகே உள்ள சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (26) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது.