இரு மகள்கள் இருந்தும் இப்படியொரு நிலைமையா?? விரக்தியில் கணவன்- மனைவி எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் உறவினர்கள்!!
இரு மகள்கள் இருந்தும் இப்படியொரு நிலைமையா?? விரக்தியில் கணவன்- மனைவி எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் உறவினர்கள்!!
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே அரியாக்கவுண்டம்பட்டி என்ற பகுதியில் வசித்து வந்தவர்கள் முருகேசன் - பாப்பா தம்பதியினர் . இவர்களுக்கு லதா, சுமதி என 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமாகி கணவருடன் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
முருகேசன் தனியார் நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து தனது மனைவியுடன் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வருமானமும் இல்லாமல், யாரும் உதவி செய்யாததால் கணவன்- மனைவி இருவரும் பெரும் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த முருகேசன் மற்றும் பாப்பா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு மகள்கள் இருந்தும் தங்களை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால்
கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.