வீட்டிற்குள பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி.. போலீசார் விசாரணை.!
வீட்டிற்குள பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி.. போலீசார் விசாரணை.!
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருக்கத்தன்சேரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி அம்பிகா (வயது 67). இவர் கடந்த சனிக்கிழமை இரவு அவரது வீட்டில் தனிமையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரம் ஆகிய வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டினுள் புகை மூட்டத்துடன் அம்பிகா உடலில் ரத்த காயத்துடன் பாதி இருந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இது கொலையா? அல்லது இரவில் தூங்கும் போது தீப்பிடித்து எரிந்ததா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.