ஒருநாள் முதல்வர் போல்..! ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராக பதவியேற்ற மாணவி.! என்ன காரணம் தெரியுமா..?
One day school head master kaviya
தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று இந்தியாவில் கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நாளில் பெண் பிள்ளைகளை கவுரவிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனுர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் மாணவி ஒருவருக்கு, ஒருநாள் தலைமையாசிரியர் பதவி கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுவருகிறது.
மொத்தம் 75 மாணவ, மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் 7 ஆசிரியர், ஆசிரியைகள் வெளிப்பார்த்துவருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வருகைப் பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செயதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய 10 ஆம் வகுப்பு படித்துவரும் காவ்யா என்ற மனைவியை தேர்வு செய்து அவரை பள்ளி தலைமை ஆசிரியராக அமரவைத்தனர்.
இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுடன் காவ்யா ஆலோசனை நடத்தினார். பின் தலைமையாசிரியராக பொறுப்பேற்ற காவ்யா ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று பாடங்கள் கற்பிக்கும் திறன் குறித்து ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்கள் விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார். அரசு பள்ளி மாணவியை ஒரு நாள் தலைமையாசிரியராக நியமித்த விஷயம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.