அடக்கடவுளே... முருங்கைக்காய் கிலோ ஒரு ரூபாய் தானா... வருத்தத்தில் விவசாயிகள்...
அடக்கடவுளே... முருங்கைக்காய் கிலோ ஒரு ரூபாய் தானா... வருத்தத்தில் விவசாயிகள்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிக அளவில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கிலோ ஒரு ரூபாய்க்கு விலை போவதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
கடந்த மாதம் வரை கிலோ 40 ரூபாய்க்கும் விற்கப்பட்ட முருங்கைக்காய் விலை சட்டென்று ஒரு ரூபாய்க்கு குறைந்தது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விலை குறைவை குறித்து விவசாயிகள் இவ்வாறு கூறி வருகின்றனர்.
வெயில் காலத்தில் முருங்கை நன்கு காய்க்கும். ஆனால் அடுத்தடுத்து பெய்த மழையால் மரங்களில் பூக்கள் உதிர்ந்து விட்டன. மழைக்கு தப்பிய காய்களை சந்தைக்கு கொண்டு வருகிறோம். குறைவான வரத்து இருந்தும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பறிப்புக் கூலி கூட கிடைக்கவில்லை.காய்களை பறிக்காமல் விட்டால் முற்றி நஷ்டம் ஏற்படும். வேளாண் அதிகாரிகள் கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.