ஆசை ஆசையாக ஆன்லைனில் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆடர் செய்த கொரோனா நோயாளி.! கடைசியில் நிகழ்ந்த சோக சம்பவம்.
One of the corona patients order for biriyani in online
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது இந்நோயால் தமிழகத்தில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 4 ஆயிரத்துக்கும் 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சத்தான உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும் என வழியுறுத்தி வருகிறது. ஆனால் சேலம் மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருக்கும் நோயாளி ஒருவர் ஆசை ஆசையாக பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆகியவற்றை ஆன்லைனில் ஆடர் செய்துள்ளார்.
அதனை அடுத்து டெலிவரி பாயும் மருத்துவமனைக்கு உணவை டெலிவரி செய்ய வந்துள்ளார். ஆனால் மருத்துவமனை வாசலில் இருந்த பாதுகாப்பு ஊழியர் டெலிவரி பாயை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார். அப்போது கொரோனா வார்டில் இருக்கும் நோயாளி நான்கு பேர் சேர்ந்த பிரியாணி ஆடர் செய்தது தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து இது போன்ற செயலில் யாரும் ஈடுப்பட வேண்டாம் என மருத்துவர்கள் நேயாளிக்கு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து டெலிவரி பாயையும், உணவையும் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆசை ஆசையாக பிரியாணியை ஆடர் செய்த நபருக்கு இந்நிகழ்வு மிகப்பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.