×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆன்லைனில் புதுவகை மோசடி; பாசத்தை பணயமாக வைத்து இலட்சக்கணக்கில் பணம் பறிப்பு.. மக்களே உஷார்.!

ஆன்லைனில் புதுவகை மோசடி; பாசத்தை பணயமாக வைத்து இலட்சக்கணக்கில் பணம் பறிப்பு.. மக்களே உஷார்.!

Advertisement


தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கத்தொடங்கியதில் இருந்து, அதனை பணயமாக வைத்து பணம் பறிப்போரின் செயல்கள் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மாநில காவல்துறை, சைபர் கிரைம் அதிகாரிகள் பல முயற்சிகள் ஏற்படுத்தினாலும் அவை தொடருகின்றன. 

இந்நிலையில், தற்போது புதிய வகையிலான மோசடி நடப்பது அம்பலமாகியுள்ளது. அதன்படி, செல்வந்தர்களை குறிவைத்து நடக்க தொடங்கியுள்ள இம்மோசடியில், சர்ச்சைக்குரிய நபர் தன்னை சிபிஐ, இடி, சைபர் கிரைம் அதிகாரி என பேசுகிறார். 

இவர் எதிர்முனையில் தான் பேசும் நபரிடம், உங்களின் மகன் / மகள், அவர்களின் நண்பர்களுடன் குற்றவழக்கில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1 இலட்சம் தொகை வேண்டும் என்று கேட்டு பணம் பறித்துள்ளனர். 

பிள்ளைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பயத்தில், பெற்றோரும் மர்ம நபர் கேட்கும் தொகையை அனுப்பி இருக்கிறார். ஒருகட்டத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக விசாரிக்க, அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, இவ்வகை மோசடியில் ரூ.1 இலட்சம் பணம் இழந்த தொழிலதிபர், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே மோசடி செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால், இவ்வாறான அழைப்புகளை பெற்றால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Online Scam #Technology #Cyber crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story