கள்ளக்காதலியின் வீட்டில் கள்ளக்காதலன் பகீர் செயல்: மனைவி மற்றும் உறவினர்கள் கதறல்..! பேரதிர்ச்சி சம்பவம்.!!
கள்ளக்காதலியின் வீட்டில் தொழிலாளி தற்கொலை: மனைவி மற்றும் உறவினர்கள் கதறல்..!
மரக்காணம் அருகே கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜி என்கிற நாராயணன் (35). இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு விஜி தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு கடைக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த விஜியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மரக்காணம் அருகே செட்டிக்குப்பத்தில் ஒரு பெண்ணின் வீட்டில் விஜி பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவரது மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது விஜி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மரக்காணம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் விஜிக்கும், செட்டிக்குப்பத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற இடத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த விஜி, அங்கேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதற்கிடையில் விஜி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.