துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு கொரோனா! மருத்துவமனையில் சிகிச்சை!
ops brother affected by corona
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் தென்மாவட்டங்களில் கொரோனா பரவல் மிக குறைவாக இருந்தநிலையில், தற்போது அதிகமாக பரவி வருகிறது. இந்தநிலையில், தேனி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாவட்டத்தில் இதுவரை 575 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர், தேனி, சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கடந்த 24ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதி ஒன்றின் தனிமை முகாமில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தோற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.