ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்.!
சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இரன்டு மாதங்களாக அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்கின்ற போட்டி நிலவி வருவதால் அதிமுகவில் நடந்து வரும் மோதல்கள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே இருந்துவந்தது.
இந்தநிலையில் தற்போது அதற்கான தீர்வு கிடைத்துள்ளது. அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், அக்கட்சியின் தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் துளசி முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் கட்சி தலைமை அலுவலகம் வந்தார். அங்கு ஆலோசனை கூட்டம் நடந்த பிறகு அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.