தனது மகனால் 5 பேர் உயிர் பிழைப்பார்கள்.! மூளைச்சாவு அடைந்த மகனின் தாய் செய்த செயல்.!
தனது மகனால் 5 பேர் உயிர் பிழைப்பார்கள்.! மூளைச்சாவு அடைந்த மகனின் தாய் செய்த செயல்.!
சேலம் மாவட்டம் மன்னார்பாளையம், அல்லிக்குட்டை கிராமத்தை சேர்ந்த கமலநாதன்- நவமணி தம்பதியின் மகன் நிவாஸ். 25 வயது நிரம்பிய இவர் தகவல் தொழில்நுட்ப பணியாளராக இருந்துள்ளார். இவர், கடந்த 15ம் தேதி இரவு, 10:00 மணியளவில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிவாஸ், கடந்த 21ம் தேதி, சேலம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 24ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்தார். இந்தநிலையில் நிவாஸின் உடல் உறுப்புகளை தானம் வழங்க, அவரது பெற்றோர் முன்வந்தனர்.
தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணைய வழிகாட்டுதல்படி, மருத்துவ குழுவினர் உடல் உறுப்புகளை தானம் பெற்றனர். நிவாஸின் கல்லீரல், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும், முதல் சிறுநீரகம், சேலம் அரசு மருத்துவமனைக்கும், 2வது சிறுநீரகம், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கும், தோல் பகுதி, கோவை கங்கா, இருதய வால்வுகள், சென்னை எம்.எம்.எம்.,க்கும் கொடுக்கப்பட்டன. தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் 5 பேர் உயிர் பிழைப்பார்கள் என்பதால் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளோம் என நிவாஸின் தாய் நவமணி தெரிவித்துள்ளார்.