மாமூல் வசூலித்து தரக்கூறி வி.ஏ.ஓ-வை மிரட்டி தாக்கிய திமுக பிரமுகர் கைது.. ஓசூரில் பரபரப்பு சம்பவம்.!
மாமூல் வசூலித்து தரக்கூறி வி.ஏ.ஓ-வை மிரட்டி தாக்கிய திமுக பிரமுகர் கைது.. ஓசூரில் பரபரப்பு சம்பவம்.!
கல்குவாரி லாரிகளை மடக்கி மாமூல் வசூலித்து தர வேண்டும் என கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டி தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், சேவகானப்பள்ளி கிராமத்தில், கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் ராமசாமி. சேவகானப்பள்ளி கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). இவர் திமுக பிரமுகராக இருக்கிறார்.
இவர் சம்பவத்தன்று கிராம நிர்வாக அலுவலர் ராமசாமிக்கு தொடர்புகொண்டு, கல்குவாரி மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர்களிடம் மாமூல் வசூல் செய்து தனக்கு தரவேண்டும் என பேசியுள்ளார். இந்த விசயத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் மறுப்பு தெரிவிக்கவே, அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
பின்னர், மற்றொரு நாளில் சீனிவாசன் கிராம நிர்வாக அதிகாரி ராமசாமிக்கு தொடர்பு கொண்டு சிட்டா அடங்கல் குறித்து பேசுகையில், அதிகாரி தான் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பதால் நாளை நேரில் வாருங்கள் என கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று கிராம நிர்வாக அலுவலர் ராமசாமியின் அலுவலகத்திற்கு சென்ற சீனிவாசன், அதிகாரியிடம் வாக்குவாதம் செய்து அவரை சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். இதனால் ராமசாமி ஓசூர் தாசில்தார் கவாஸ்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் திமுக பிரமுகர் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.