ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மரணம்.! சோகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள்!
ottapidaram former MLA died
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஓ.எஸ்.வேலுச்சாமி. இவர் நேற்று உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. இவர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1977-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1980-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ-வாக இருந்தார்.
பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது அதில் ஓ.எஸ்.வேலுச்சாமி தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். ஓ.எஸ்.வேலுச்சாமி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன் என அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
ஓ.எஸ்.வேலுச்சாமி அவர்களின் இழப்பு, பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தூத்துக்குடி மாவட்ட த.மா.காவினருக்கும், என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். ஓ.எஸ்.வேலுச்சாமிக்கு ரஞ்சிதம்மாள் என்ற மனைவியும், சுந்தரம் என்ற மகனும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். கோவில்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஓ.எஸ்.வேலுச்சாமியின் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.