பேண்ட் ஜிப்பை அவிழ்த்து பொது இடத்தில் ஜஸ்டின் செய்த செயல்.! அலறித்துடிக்க ஹாஸ்பிடலில் அனுமதி.!
பேண்ட் ஜிப்பை அவிழ்த்து பொது இடத்தில் ஜஸ்டின் செய்த செயல்.! அலறித்துடிக்க ஹாஸ்பிடலில் அனுமதி.!
வீட்டிற்கு அருகில் சிறுநீர் கழித்த நபர் மீது ஒரு பெண் சுடுநீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்ற நபர் அதே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு அருகில் பொது இடத்தில் சிறுநீர் கழித்துள்ளார். அந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் மகாலட்சுமி என்ற பெண் வசித்து வந்துள்ளார். ஜஸ்டினின் இந்த மோசமான செயலை பார்த்த இளம் பெண் ஆத்திரமடைந்து அவரிடம் தட்டி கேட்டுள்ளார்.
அப்போது அந்த பெண்ணை ஜஸ்டின் மிக அநாகரிகமாக விமர்சித்துள்ளார். இது மகாலட்சுமிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, ஜஸ்டினை அவர் பழிவாங்க நினைத்து வீட்டில் கொதிக்க வைத்திருந்த வெந்நீரை கொண்டு வந்து அவர் மீது ஊற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: படிப்பு சொல்லிக்கொடுத்த பள்ளியிலேயே கைவைத்த திருட்டு இளைஞர்கள்.. 2 பேர் கைது.!
இதில் ஜஸ்டின் உடலில் படுகாயம் ஏற்பட்டது. தற்போது, அவர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்பத்தூர்: 4 பேர் கும்பலால் பயங்கரம்.. பேட்மிட்டன் பயிற்சியாளர் சரமாரியாக வெட்டிக்கொலை.!