மனிதனின் முக தோற்றம் கொண்ட அரியவகை ஆந்தை..! கீழே விழுந்த ஆந்தையை கூட்டம் கூட்டமாக பார்த்த மக்கள்.!
Owl found like human face near pudukkottai
மனிதமுகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகை ஆந்தை ஓன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்க்கோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்க்கோட்டை அருகே உள்ள வளவம்படி என்ற கிராமத்தில் இன்று காலை மனிதனின் முகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகை ஆந்தை ஓன்று பறந்து செல்ல முடியாமால் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்துள்ளது. ஆந்தையை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆந்தையை சிகிச்சைக்காக அங்கிருந்து மீட்டு சென்றனர். பார்ப்பதற்கு மனிதர்களின் முகம் போல அமைப்பு கொண்ட ஆந்தை கீழே விழுந்த தகவல் அந்த பகுதியில் தீயாய் பரவ பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த ஆந்தையை பார்த்து சென்றனர்.