கூடா நட்பு கேடாய் முடியும்.! நண்பர் இருவருக்கும் ஒரே பெண் மீது காதல்.! பரிதாபமாக போன உயிர்.!
தான் காதலித்த அதே பெண்ணை காதலித்ததால், ஆத்திரத்தில் நண்பனை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவனை
தான் காதலித்த அதே பெண்ணை காதலித்ததால், ஆத்திரத்தில் நண்பனை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் மதன்குமார். 21 வயது நிரம்பிய இவர் பெயின்டர் வேலை பார்த்துவந்துள்ளார். இந்தநிலையில் மதன்குமார் கடந்த 30-ஆம் தேதி மந்தித்தோப்பு காட்டு பகுதியில் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலையாளியை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மதன்குமாருடன் பெயிண்டராக பணியாற்றிய 17 வயது சிறுவனே மதன்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டடியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் நானும், மதன்குமாரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே பெயின்டர் வேலைக்கு செல்வோம். நான் ஒரு இளம்பெண்ணை காதலித்தேன். அதே பெண்ணை அவனும் காதலித்து வந்துள்ளான். ஆனால் எனக்கு இந்த விஷயம் தெரியாது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் நான் அவனது செல்போனை வாங்கி பார்த்தபோது அந்த இளம்பெண்ணுடன் அவன் சாட்டிங் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் நான், மதன்குமாரை கண்டித்தேன். ஆனாலும் அவன் கேட்கவில்லை. நான் காதலிக்கும் பெண்ணை, மதன் குமாரும் காதலித்ததால் அவனை கொலை செய்ய முடிவு செய்தேன்.
இந்தநிலையில், சம்பவத்தன்று மந்தித் தோப்பு காட்டுப்பகுதிக்கு முன் கூட்டியே சென்று அங்குள்ள முட்செடியில் அரிவாளை மறைத்து வைத்தேன். அதன் பிறகு பைக்கில் கோவில்பட்டி வந்து மது குடிக்க செல்வோம் என்று கூறி மதன் குமாரை பைக்கில் மந்ததித்தோப்பு காட்டு பகுதிக்கு அழைத்து வந்தேன். அங்கு வைத்து இருவரும் மது அருந்தினோம். மதன்குமார் மது குடித்து போதையில் இருந்தபோது நான், ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மதன்குமாரின் கழுத்தில் ஓங்கி அரிவாளால் வெட்டினேன்.
இதில் அவன், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தான். அதன் பிறகு அரிவாளை அங்குள்ள கண்மாயில் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டேன். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு, மதன்குமாரின் தந்தையுடன் சேர்ந்து காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றேன். ஆனாலும் போலீசார் எனது செல்போனில் பதிவான அழைப்புகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்தனர் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனை போலீசார் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்தனர்.