கடன் வாங்கி தருவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் உல்லாசம்... வீடியோ வெளியானதால் அதிர்ச்சி.!
கடன் வாங்கி தருவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் உல்லாசம்... வீடியோ வெளியானதால் அதிர்ச்சி.!
கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வரும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து சைபர் கிரேவி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அந்த மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் பண்ருட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிக்கு வரும் பெண்களிடம் வாழ்வாதார திட்டத்தின் கீழ் கடன் வாங்கிக் கொடுப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்து அது சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனால் பல பெண்களின் வாழ்க்கை பலியாவதாக குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் மீது நடவடிக்கை எடுத்து பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் ராஜாராம் இது தொடர்பாக சைபர் கிரைம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். சைபர் கிரைம் அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு எத்தனை பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார் மேலும் இதன் பின்னணியில் என்னென்ன குற்றங்கள் இருக்கின்றன என்பது தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.