தொழிலதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் துள்ளத்துடிக்க முகம் சிதைத்து படுகொலை; பரமக்குடியில் பகீர்.!
தொழிலதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் துள்ளத்துடிக்க முகம் சிதைத்து படுகொலை; பரமக்குடியில் பகீர்.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தில் வசித்து வருபவர் உத்திரகுமார் (வயது 35). இவர் வழக்கறிஞர் ஆவார். சம்பவத்தன்று பரமக்குடி கிருஷ்ணா திரையரங்கு பகுதியில் உள்ள சகோதரி ஜோதிமணி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரை மறித்த கும்பல், வழக்கறிஞரை வெட்டிக் கொலை செய்தது.
கொலை சம்பவத்தில் தொடர்பு
இந்த சம்பவத்தில் முகம் சிதைந்து உத்திரகுமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உத்திரகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பழனிச்சாமி என்பவரின் கொலை வழக்கில் உத்திரகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
பழிக்குப்பழியாக சோகம்
இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட குமார், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். பழனிச்சாமி - உத்திரகுமார் இடையே, ரியல் எஸ்டேட் விவகாரத்தில் முன்விரோதமும் இருந்துள்ளது. இதனால் பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பழிக்குப்பழியாக கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: #JustIN: வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிப்படுகொலை; பரமக்குடியில் பரபரப்பு.!
இதையும் படிங்க: வீடு வாசலில் பெண்ணுக்கு காத்திருந்த எமன்; மின்கம்பி அறுந்து தொங்கி நேர்ந்த சோகம்.! பெண் பலி.!