விபத்தில் உயிரிழந்த தனது மகனுக்கு இறுதிசடங்கு செய்ய மறுக்கும் பெற்றோர்கள்! வெளியான கண்கலங்க வைக்கும் காரணம்!
Parents allow to donate their braindead son orphans
ராமநாதபுரம் பரமக்குடி அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு சரத்குமார் என்ற 21 வயது மகன் உள்ளார். அவர் சிவகங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் அண்மையில் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி விபத்தில் சிக்கினார். பின்னர் உயிருக்கு போராடி 2 மணி நேரம் சாலையில் கிடந்த அவரை அப்பகுதியில் வந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பெற்றோருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சரத்குமாரை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து பெற்றோர்களின் சம்மதத்துடன் சரத்குமாரின் உடலுறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் உயிருக்கு போராடிய ஏழு நோயாளிகள் மறுவாழ்வு அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த சரத்குமாரின் பெற்றோர்கள் எனது மகன் ஏழு பேரின் உடலிலும் உயிருடன் இருக்கிறான்.அதனால் அவருக்கு இறுதிசடங்கு செய்யப்போவதில்லை என கூறியுள்ளனர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.