பெற்றோர்களே உஷார்..ஆசையாக சாக்கிலெட் தின்ற குழந்தை.. தொண்டையில் சிக்கியதால் நடந்த விபரீதம்..
பெற்றோர்களே உஷார்..ஆசையாக சாக்கிலெட் தின்ற குழந்தை.. தொண்டையில் சிக்கியதால் நடந்த விபரீதம்..
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் மலர்நிகா என்பவரை முன்று ஆண்டிற்கு முன் திருமணம் செய்து ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஞானசேகர் உடல்நல குறைவால் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து மலர்நிகா தனது மகன் ஹர்ஷனுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று மலர்நிகா ஹர்ஷனுக்கு சாக்லெட் கொடுத்துள்ளார். குழந்தை ஹார்ஷன் சாக்லெட்டை மெல்லாமல் தவறுதலாக விழுங்கியுள்ளார் இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மலர்நிகா ஆட்டோவில் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஹர்ஷனை அழைத்து சென்றார். அங்கு ஹர்ஷனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தென்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை ஹர்ஷனின் இறப்பிர்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சாக்லேட் சாப்பிட்டு ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.