ஆபத்து.! நாட்டு வைத்தியம் என்ற பெயரில் இதையெல்லாமா கொடுப்பது? உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை!!
parents give mercury to baby

நாகை மாவட்டம் பெருஞ்சேரியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி சுமித்ரா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 14ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக குழந்தையின் வயிறு வீங்கிய நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரவணன் சிகிச்சைக்காக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தது. இந்த நிலையில் குழந்தை கருப்பு நிறத்தில் வாந்தி எடுத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதன் வயிற்றில் கட்டி போன்று ஏதோ ஒரு பொருள் இருப்பதை கண்டுள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தைக்கு கொடுக்கப்பட்ட உணவு குறித்து குழந்தையின் பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர். அப்பொழுது அவர்கள் நாட்டுவைத்திய முறைப்படி குழந்தைக்கு வெற்றிலை சாற்றில் பாதரசம் கலந்து கொடுத்தாக கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் குழந்தையை உடனே மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து உயிருக்கு போராடிய குழந்தை தற்பொழுது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.