சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 வயது மகளை தவறவிட்ட பெற்றோர்கள்!
parents missed child in railway station
பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனோஜ்குமாருக்கு திருமணமான நிலையில் அவரது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் சென்னையில் வசித்துவந்துள்ளார். இந்தநிலையில் இவர்கள் மூவரும் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அவர்கள் சென்டிரல் ரயில்நிலையத்தில் 6-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறினர். அப்போது மனோஜ் குமாரின் மகள் திடீரென காணாமல் போயுள்ளார். தனது மக்களை காணவில்லை என அறிந்த மனோஜ்குமார் அதிர்ச்சி அடைந்து ரயில் நிலையம் முழுவதும் தேடியுள்ளார். ஆனால் அவரது மகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அவரது மகள் 7-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஐதராபாத் செல்லும் ரெயிலில் ஏறி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை ஆந்திர மாநிலம் ராமகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் ரயில்வே போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.