ரயிலில் படியில் பயணம் செய்த பயணி! அந்தரத்தில் பறந்த ஆடை!
Passenger travel in train step
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் குருவாயூர் எக்ஸ்பிரஸில் இன்று பயணி ஒருவர் படியில் நின்றுகொண்டு பயணித்தபோது அவரது வேட்டி காற்றில் அடித்துச்செல்லப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து காலையில் புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் காலை 8:50 மணிக்கு தாம்பரம் வந்தது. தாம்பரத்தில் ஏராளமான பயணிகள் ஏறினர். இதனால் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏராளமான பயணிகள் நின்றுகொண்டே பயணித்தனர்.
அந்த ரயில் விழுப்புரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, படியில் நின்று பயணித்த ஒருவரின் வேட்டி காற்றில் அடித்துச்செல்லப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அவர் படியில் நின்று பயணித்ததே காரணம் என கூறுகின்றனர். அந்த நபரின் வேஷ்டி காற்றில் அடித்துச்செல்லல்லப்பட்டதை அடுத்து மற்ற பயணிகள் அனைவரும் உள்ளே சென்றனர். அதன்பிறகு யாரும் படியில் நின்று பயணம் செய்யவில்லை.
ரயில் மற்றும் பேருந்தில் பயணிகள் படியில் நின்று பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் படியில் நின்று பயணம் செய்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். தயவு செய்து இதனை அனைவரும் கடைபிடிப்போம். விபத்தை தவிர்த்து உயிரை காப்போம்.