கொரோனா எதிரொலி! வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கை! மீறினால் இதுதான் நடக்கும்!
Passport panned if foreign teturner comeout from home
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் 14நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. ஆனால் அரசின் அறிவுரையை மீறி சிலர் வெளியே நடமாடுவதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.