இங்க வாடா.. என கூப்பிட்டால் உடனே பறந்துவரும் மயில்கள்.! நெகிழ்ச்சியடையும் கிராம மக்கள்.!
இங்க வாடா.. என கூப்பிட்டால் உடனே பறந்துவரும் மயில்கள்.! நெகிழ்ச்சியடையும் கிராம மக்கள்.!
மனிதர்களை காட்டிலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணர்வுகள் அதிகம் என்பதை பலரும் அறிந்திருப்போம். தன்னை வளர்த்தவர்கள் வீட்டில் ஏதேனும் துக்கம் என்றாலே அவர்கள் வளர்க்கும் பிராணிகளும் துக்கம் அனுசரிக்கும். அந்த அளவிற்கு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பாசம் அதிகம் இருக்கும்.
இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் பெண்ணகோணம் கிராமத்தில் குடும்பத்தோடு சகஜமாக பழகி வரும் இரண்டு மயில்களால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்பகுதி இளைஞர்களும் அந்த மயில்களுடன் விளையாடி வருகின்றனர்.
அப்பகுதி மக்களும் அந்த மயில்களை தங்களது குடும்ப உறுப்பினர் போல பார்த்து வருகின்றனர். மேலும், முருக பெருமானின் வாகனம் மயில் என்பதாலும் தங்கள் வீட்டிற்கு முருகனே வருகிறார் என கருதுகின்றனர் அப்பகுதி மக்கள். மேலும், அப்பகுதி மக்கள் டேய் இங்க வாடா.. என கூப்பிட்டால் உடனே வந்துவிடுமாம் அந்த மயில்.