×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் மக்களே தடுக்கலாம் .! தமிழக அரசு அதிரடி.!

#Breaking டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் மக்களே தடுக்கலாம் .! தமிழக அரசு அதிரடி.!

Advertisement

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்பதற்கான சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனாலும் சில ஊர்களில் அத்தகைய இடங்களில் சில கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். 

இந்நிலையில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. இதன்படி மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர்கள் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மது விலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்தம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் மக்களே தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tasmac
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story