தீபாவளி பண்டிகை.. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!!
தீபாவளி பண்டிகை.. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!!
தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.
*அதன்படி, குறைந்த சத்தத்துடன், குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும்.
*திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசுகளை வெடிக்கவேண்டுமெனில் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
*அதிக சத்தம் எழுப்பக்கூடிய மற்றும் அதிரக்கூடிய தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
*மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
*குடிசைப்பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.