தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆமணக்கு எண்ணெய் குடித்த பச்சிளம் சிசு மரணம்; தாயின் அலட்சியத்தால் துயரமா?.. பதறவைக்கும் சோகம்.!

ஆமணக்கு எண்ணெய் குடித்த பச்சிளம் சிசு மரணம்; தாயின் அலட்சியத்தால் துயரமா?.. பதறவைக்கும் சோகம்.!

Perambalur Baby Died Advertisement

தாயின் அலட்சியத்தால் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மரணித்த சோகம் நடந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (வயது 36). இவருக்கும், முசிறி மலைப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. 

திருமணத்தை தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண்மணி, கடந்த 25 நாட்களுக்கு முன்னதாக அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, தனது தாயாரின் வீட்டில் பெண்மணி இருந்துள்ளார். இதற்கிடையில், 2 நாட்களுக்கு முன்னதாக பச்சிளம் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படவே, தாயார் குழந்தைக்கு வசம்பு மற்றும் ஆமணக்கு எண்ணெய் கொடுத்துள்ளார். 

Perambalur

இதன்பின் குழந்தையின் உடல்நலம் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதுகுறித்து கணவருக்கு தெரிவிக்கவே, அவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் பச்சிளம் மகனை சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தைக்கு அளவுக்கு அதிகமான ஆமணக்கு எண்ணெய் கொடுத்ததால் விபரீதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Perambalur #mother #baby #died #tamilnadu #பெரம்பலூர் #குழந்தை மரணம் #முசிறி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story