"பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே" - பெரியார் கழகத்தினர் ஊர் ஊராக போஸ்டர்..!
பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே - பெரியார் கழகத்தினர் ஊர் ஊராக போஸ்டர்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது, திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பலாத்காரம் செய்து ஏமாற்றி, கருக்கலைப்பு செய்ததாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
கடந்த 2011 ம் ஆண்டு முதல் சீமானின் மீது நடிகை குற்றசாட்டை முன்வைத்து வந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் 3 மாதத்துக்குள் பலாத்கார வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "விஜயலட்சுமியின் கர்ப்பப்பையை நீக்க முடிவு.?" வீரலட்சுமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!
அரசியல் சர்ச்சை
இதனால் சீமானுக்கு எதிரான செயல்களை விஜயலட்சுமி முன்னெடுத்து வரும் நிலையில், சீமானும் ஆவேசத்துடன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து வருகிறார். மேலும், சமீபமாக சீமான் பெரியாருக்கு எதிராக பேசிய விஷயம் தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
இதனிடையே, பாலியல் வழக்கில் சிக்கிய சீமானை, கடுமையான சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பெரியார் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து பல ஊர்களில் ஒட்டி இருக்கின்றனர். சென்னை, மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
போஸ்டர் வைரல்
அந்த போஸ்டரில், "தமிழ்நாடு அரசே செமனை தப்பவிடாதே. உதவி என்று வந்த பெண்ணை ஏமாற்றி, வன்புணர்வு செய்து 7 க்கும் மேற்பட்ட முறை கருக்களை செய்த பாலியல் குற்றவாளியான சீமானை கைது செய்து சிறையில் அடை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பெரியாரின் ஆவி சீமானை பார்த்துக்கும்" - திமுக பிரமுகர் தடாலடி பேச்சு.!