#Breaking: சீமான் வீடு முற்றுகை - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு., சூடேறும் பிரச்சனை.!
#Breaking: சீமான் வீடு முற்றுகை - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு., சூடேறும் பிரச்சனை.!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூர் மற்றும் புதுச்சேரியில் வைத்து நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கையில், ஈவே இராமசாமி பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து இருந்தார். இந்த விஷயம் பெரியாரிய ஆதரவாளர்களிடம் எதிர்ப்பை பெற்றது.
இந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், 30 க்கும் மேற்பட்ட அமைப்புகள், நாளை சீமானின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவிருக்கிறோம்.
இதையும் படிங்க: முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.!
போராட்டம் தொடரும் என அறிவிப்பு
பெரியாரை சிறுமைப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்த பெரியாரை, சீமான் கைக்கூலி போல செயல்பட்டு எதிர்த்து வருகிறார். சீமானின் அநாகரீக பேச்சுக்கள் தொடர்ந்து வருகிறது. நாங்கள் நாளை சீமான் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்.
100 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளோம். காலம் கடந்தும் சீமான் ஆதாரம் தரவில்லை. ஆதாரம் இல்லாததால் சீமான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அண்ணாமலை நான் தருகிறேன் ஆதாரம் என கூறி இருந்தார். அவரும் பதில் தரவில்லை" என பேசினர்.
இதையும் படிங்க: #Breaking: தமிழகத்தை உயர்கல்வியில் இருந்து கீழே தள்ள முயற்சி? - முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்.!