புதிய அறிவிப்பு! ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு!
Permission not allowed for food delievery
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில், 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் உணவு, மளிகைபொருட்கள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகளுடன் சென்னை மாநகராட்சி அனுமதி அளித்தது.
ஆனால் பின்னர் தற்போது இந்த உத்தரவை தளர்த்தி மாநாராட்சி மீண்டும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி சமைத்த உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்யும் ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ், சோமேட்டோ போன்ற நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களை டெலிவரி செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 6 மணி முதல் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க டீக்கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது