ஆத்தாடி..! 100 ரூபாயை நெருங்கும் பெட்ரோல் விலை.! கடும் வேதனையில் வாகன ஓட்டிகள்.!
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 100 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், பொதுமக்க
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 100 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து இல்லாததால் வெளியூரில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியில்லாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் அவதிப்பட்டுவரும் இந்த சூழ்நிலையிலும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருவது பொதுமக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் 98.40 ரூபாய்க்கும் , டீசல் விலை 27 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் 92.58 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசு அதிகரித்து ரூ.98.65க்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 25 காசு அதிகரித்து ரூ.92.83க்கும் விற்பனை செய்யப்படுகிறது.