பி.எப் வட்டி விகிதம் குறைப்பு! தமிழக அரசு அதிரடி!
Pf interest decreased
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான பணம் செலவிடப்படுவதால், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் பி.எப் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய் யப்படும், பிஎப் நிதிக்கு, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. ஏப்.,1 முதல், ஜூன், 30 வரை, வட்டி விகிதத்தை, 7.1 சதவீதமாக நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதை பின்பற்றி, தமிழக அரசும் பிஎப் நிதிக்கு, ஏப்ரல் 1 முதல், ஜூன், 30 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.