திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்!
play store added student app
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் பற்றிக் கூடுதலாகப் படித்துவந்திருக்கிறார். அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் ஆப்ஸ் உருவாக்கச் செய்துள்ளது.
மாணவர் பிரனேஷ் ஜெட் லைவ் சாட் (jet live chat) என்ற செயலியை உருவாக்கி கூகுளில் சேர்க்க விண்ணப்பித்தார். அந்த செயலியை பரிசீலித்த கூகுள் பல கட்ட ஆய்வுக்குப் பின் அங்கீகரித்து கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்த்துள்ளது.
அந்த செயலியின் சிறப்பு என்னவென்றால் ஆடியோ வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும், அதிகளவு எம்பி கொண்ட பைல்களை அதாவது ஒருமுழு திரைப்படத்தை கூட இந்த செயலி மூலமாக அனுப்ப முடியும். அதேபோல், முகநூல் பதிவுகளில் 'லைக்' பதிவிடுவது போல, இந்த செயலியிலும் தகவல்களின் மீது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல 1000க்கும் மேற்பட்ட இமோஜிகளை பதிவிட இவரின் செயலி பயனாளர்களுக்கு அனுமதி வழங்குகிறது. இவரின் ஜெட் லைவ் சாட் செயலிக்குக் கூகிள் நிறுவனம் 2048 ஆண்டு வரை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.