சொந்த ஊரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முன்னாள் ராணுவ வீரர்!!
police arrest ex army man
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாத்தூர்போலீசார் செங்களூரில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தை மோப்பம்பிடித்து சென்றுள்ளனர்.
அந்த கரும்பு தோப்பை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது, அங்கு ஒரு கும்பல் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது. சாராயம் காய்ச்சிய நபர்கள் போலீசார் வருவதை பார்த்துவிட்டு ஓடியுள்ளனர். ஓடிய நபர்களில் ஒருவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் பெயர் யாகப்பன் என்பதும், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், தெரியவந்துள்ளது. அவருடைய சொந்த கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு பானையில் காய்ச்சிய நிலையில் இருந்த 200 லிட்டருக்கு அதிகமாக இருந்த சாராயத்தை போலீசார் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட யகப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இதேபோல் சமீபத்தில் புதுக்கோட்டையில் ராணுவ வீரர் ஒருவர் பெரியார் சிலை சேதப்படுத்தியதில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.