லிட்டர் கணக்கில் கலப்பட எண்ணெய் விற்பனை... 2பேரை அலேக்காக தூக்கி உள்ளே வைத்த போலீசார்..!
லிட்டர் கணக்கில் கலப்பட எண்ணெய் விற்பனை... 2பேரை அலேக்காக தூக்கி உள்ளே வைத்த போலீசார்..!
கலப்பட எண்ணெயை பதுக்கி விற்பனை செய்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்துள்ளன.
இதன் காரணமாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினர் தனிப்படை அமைத்து பட்டரவாக்கம் மற்றும் திருநின்றவூர் போன்ற பகுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
கிட்டதட்ட 18 ஆயிரத்து 200 லிட்டர் கலப்பட எண்ணெய், 200 லிட்டர் டீசல், 1100 லிட்டர் பெட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விற்பனை செய்த இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.