அட கொடுமையே... துணி துவைத்ததில் தகராறு.!! மனநலம் பாதித்த நபர் கொலை.!! இளைஞர்கள் வெறி செயல்.!!
அட கொடுமையே... துணி துவைத்ததில் தகராறு.!! மனநலம் பாதித்த நபர் கொலை.!! இளைஞர்கள் வெறி செயல்.!!
தேனியில் துணி துவைக்கும் போது அழுக்கு நீர் மேலே பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 5 நபர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் தாமோதரன். 42 வயதான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. இந்நிலையில் தாமோதரன் கடந்த 6ம் தேதி முல்லைப் பெரியாறு அணை அருகே படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பலனின்றி மரணம்
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாமோதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையும் படிங்க: காதலியை நண்பனுக்கு விருந்தாகிய ரவுடி.. கொலையில் முடிந்த கள்ள உறவு.!! அதிர்ச்சி பின்னணி.!!
அதிர்ச்சி வாக்குமூலம்
இதனையடுத்து தாமோதரன் மரணம் தொடர்பாக 5 இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பழனிசெட்டிபட்டி அருகே ஆற்றில் தாமோதரன் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது அழுக்கு நீர் பட்டதால் அவரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... அள்ள அள்ள போதை மாத்திரைகள்.!! ஒருவர் கைது.!!