எங்க போனாலும் வில்லங்கம்... காது கடித்த பஞ்சாயத்திற்கு போன காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
எங்க போனாலும் வில்லங்கம்... காது கடித்த பஞ்சாயத்திற்கு போன காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து விசாரிக்க சென்ற இடத்தில் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முசிறி அருகே உள்ள மங்கலம் தெற்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(46) விவசாய வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் செந்தில்குமார் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் சுகுமார் ஆகியோருக்கு இடையே முன்வருவதும் இருந்திருக்கிறது.
இந்நிலையில் சேகர் தனது விவசாய பணிகளை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதே அந்த வழியாக வந்த பாஸ்கர் சுகுமார், சுரேந்தர் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் சேகரை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். மேலும் பாஸ்கர் சேகரின் வலது பக்க காதை கடித்து இருக்கிறார். இதில் படுகாயமடைந்த சேகரை அருகில் இருந்தவர்கள் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து சேகர் அளித்த புகாரின் பேரில் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்வதற்காக மங்கலம் தெற்கு மேடு பகுதிக்குச் சென்று இருக்கிறது காவல்துறை. அப்போது பாஸ்கர் வீட்டின் பின்புறத்தில் சாராய ஊறல் போட்ட துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சோதனை இட்டபோது 40 லிட்டர் சாராயத்தை அவர்கள் ஊர் திருவிழாவிற்காக ஊறல் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் சாராய ஊறல்களை உடைத்து விட்டு பாஸ்கர் சுகுமார் விக்னேஸ்வரன் மற்றும் சுரேந்தர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.