தமிழுக்காக போராடிய மாணவர்கள்!. போராட்டத்தில் மாணவியை போலீஸ் கொடுரமாக தாக்கும் வீடியோ!.
தமிழுக்காக போராடிய மாணவர்கள்!. போராட்டத்தில் மாணவியை போலீஸ் கொடுரமாக தாக்கும் வீடியோ!.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஆங்கில வழியில் கல்விப் பயின்றதாக சான்றிதழ் பெறும் மாணவா்கள் பருவத் தோ்வுகளை கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்மே எழுத வேண்டும் என்ற நடைமுறை அண்மையில் அமல்படுத்தப்பட்டது.
இதற்கு மாணவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனர். மேலும் வருகைப் பதிவில், போதிய வருகைப் பதிவு இல்லாத மாணவா்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை பலமடங்கு உயா்த்தப்பட்டுள்ளதாக மாணவா்கள் குற்றம் சாட்டினா்.
இந்நிலையில் பருவத் தோ்வுகளை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும். வருகை பதிவு தொடா்பான அபராதத் தொகையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை முன்னிருத்தி மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க் கிழமை பல்கலைக்கழக நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கும், மாணவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து காவல் துறையினா் தடியடி நடத்தி மாணவா்களை களையச் செய்தனா். மாணவா்கள் மீதான தடியடிக்கு பலரும் கண்டனம் தொிவித்து வருகின்றனா்.
அப்போது மனைவியை போலீஸ் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.