வாகன ஓட்டிகளே உஷார்! ஹெல்மெட் போடாவிட்டால் வித்தியாசமான தண்டனை கொடுக்கும் போலீசார்.
Police different action against to helmet issue
மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்ததை அடுத்து கடந்த மாதம் முதல் காவல்துறையினர் மக்களை தலைக்கவசம் அணிய கூறி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் வேளையில் அப்போது தலைகவசம் அணியாமல் உரிய ஆவணங்கள் இன்றி வந்தவர்கள் மீது அபராதம் விதிக்காமல் அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி அதற்கு பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.
தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை ஊர்வலமாக அழைத்து சென்று, தலைகவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பழங்கள் மற்றும் ரொட்டிகள் அவர்களது சொந்த செலவில் வாங்கி தருமாறு நடவடிக்கை எடுத்தனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான பொதுமக்கள் அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.