×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தஞ்சை டாஸ்மாக் மரணம்.... கொலை பழியை மனைவி மீது சுமத்துவதாக பரபரப்பு புகார்... காவல்துறைக்கு கண்டனம்.!

தஞ்சை டாஸ்மாக் மரணம்.... கொலை பழியை மனைவி மீது சுமத்துவதாக பரபரப்பு புகார்... காவல்துறைக்கு கண்டனம்.!

Advertisement

தஞ்சை மாவட்டத்தில்  டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் இறந்த வழக்கில் இறந்தவரது மனைவியை கொலை வழியை ஏற்க்குமாறு காவல்துறை தொடர்ந்து மிரட்டி வருவதாக  தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கீழ்வாசல் படைவீட்டு அம்மன் தெருவில் வசித்து வந்த  குப்புசாமி மற்றும் விவேக் ஆகியோர் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் கடந்த  மே மாதம் 21ஆம் தேதி  கீழ ஆலங்கம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் பாரில் திருட்டுத்தனமாக மது வாங்கி குடித்துள்ளனர். அது குடித்த சில நொடிகளில்  குப்புசாமி உயிரிழந்துள்ளார். மேலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த விவேக்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கையில்  மதுபானத்தில் சயனைடு கலந்ததால் தான்  இருவரும் உயிரிழந்ததாக  தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் இறந்த விவேக்கின் முன்னாள் மனைவியை கொலை பழியை ஏற்குமாறு காவல்துறையினர் மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கும் அவர் தனக்கும் விவேக் இருக்கும் கல்யாணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது என்றும் மதுவிற்கு அடிமையான அவரை குடிக்க விடாமல் தடுத்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் புரிந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரிகள் ஆண் துணை இல்லாமல் எவ்வாறு மூன்று குழந்தைகளை வளர்க்கிறாய் வேறு யாருடனும் தொடர்பு வைத்திருக்கிறாயா.? அதனால்தான் விவேக் விஷம் வைத்துக் கொண்றாயா என்று  தன்மீது பழி சுமத்துவதாக தெரிவித்துள்ளார். அரசு அனுமதி பெற்ற மதுபான பாரில் சயனைடு கலந்த மது எவ்வாறு வந்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் அப்பாவி பெண் மீது பழி சுமத்துவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #thanjavur #tasmacdeath #crimenews #policeenforce
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story