எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது.! மகனுக்கு மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை வாங்கிய போலீஸ்.! முதலமைச்சர் அதிரடி.!
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஊரடங்கு சமயத்தில் அவரது
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஊரடங்கு சமயத்தில் அவரது இருசக்கர வாகனத்தில், அவருடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்தகத்தில் மருந்துகள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது தலைக்கவசம் அணியாமல் பாலாஜி வாகனத்தை இயக்கி வந்ததாக, போக்குவரத்து காவல் துறையினர் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில், பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்த நாளுல குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க ரூ 500 ரோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டுஅனுப்புறாங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன்" என்று மனவேதனையுடன் ட்விட்டரில் பதிவு செய்தார்.
இது தொடர்பான பதிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் ரூ.500 ஐ பாலாஜியிடம் ஒப்படைக்குமாறும், சிறுவனுக்கு தேவையான மருந்துகளை வாங்கி கொடுத்து பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டு வாருங்கள் என்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, காவல் அதிகாரிகள் பாலாஜி வீட்டிற்கு நேரில் சென்று ரூ.500 பணத்தை வழங்கிய நிலையில், சிறுவனுக்கு மருந்துகளையும் வாங்கி கொடுத்தனர். இதனால் நெகிழ்ந்துபோன சிறுவனின் குடும்பத்தினர், தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறையினருக்கு பெரும் நன்றியை தெரிவித்துள்ளனர்.