தூத்துக்குடியில் குவியும் போலீசார்!.13 பேர் மரணத்தை கண்டுகொள்ளாத அரசாங்கம், பொதுமக்கள் வேதனை!
police protect in tuticorin
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை இயங்க தேசியப் பசுமைத் தீர்பாயம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருக்கிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கக்கூடிய அபாயம் ஏற்படும் என்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.