×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போலி பெண் சாமியாரை நம்பி கணவரை உயிரை காவு கொடுத்த பெண்மணி.. சத்தியவதியின் சத்தியமில்லா பேச்சு.. பறிபோன உயிர்.!

போலி பெண் சாமியாரை நம்பி கணவரை உயிரை காவு கொடுத்த பெண்மணி.. சத்தியவதியின் சத்தியமில்லா பேச்சு.. பறிபோன உயிர்.!

Advertisement

தன்னை சாமியார் என அடையாளப்படுத்திய பெண்மணி வயதானவரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைத்த பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. போலிசாமியாரை நம்பினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளதை விளக்குகிறது இந்த சம்பவம்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோரிமேடு இந்திரா நகரில் வசித்து வருபவர் முருகன் (வயது 45). இவர் எலக்ட்ரீஷியனாக இருக்கிறார். முருகனின் மனைவி லட்சுமி (வயது 35). இவர் வீட்டிலேயே துணி தைத்து வருகிறார். தம்பதிகளுக்கு 10 ஆம் வகுப்பு பயிலும் மகனும், 7 ம் வகுப்பு பயிலும் மகளும் இருக்கின்றனர். இவர்களின் வீட்டருகே லட்சுமியின் மாமனார் துரைராஜன், மாமியார் உதயகுமாரி ஆகியோரும் வசிக்கிறார்கள். 

கடந்த 2020-ல் லட்சுமியின் வீட்டிற்கு அருகே சத்தியவதி என்ற 26 வயது பெண்மணி வாடகைக்கு குடித்தனம் வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருவதாகவும், தனது கணவர் திண்டிவனம் மார்க்கெட்டில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். சத்தியவதி லட்சுமியிடம் அன்பாக பேசி வந்த நிலையில், முருகனுக்கு சம்பவத்தன்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இதனைகவனித்த சத்தியவதியோ தன்னை மந்திரவாதி என கூறி, முருகனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை பரிகாரத்தால் மட்டுமே குணப்படுத்த இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கான பூஜையை தான் செய்வதாக கூறி, லட்சுமியை காஞ்சிபுரத்திற்கு அழைத்து சென்று பூஜையும் செய்துள்ளார். பின்னர், வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி பூஜைக்கு நகை, பணத்தை எடுத்து வைக்க சொல்லியுள்ளார். அனைத்தும் நடந்து முடிக்க சர்க்கரை நோயால் அவதிப்பட்ட முருகனுக்கு மாத்திரை சாப்பிட்டு வயிற்று வலி குணமாக, தனது பூஜையால் அனைத்தும் நடந்தது., இதனை வெளியே கூறினால் இரத்தம் கக்கி சாவீர்கள் என சத்தியவதி மிரட்டி இருக்கிறார். 

இதற்கு பயந்துபோன தம்பதியும் விஷயத்தை வெளியே கூறாமல் இருக்க, லட்சுமியின் மாமனார் துரைராஜனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களிடமும் இதையே கூறிய சத்தியவதி, வீட்டில் வைத்து சிகிச்சை பெறவிடாமல் பூஜை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் துரைராஜன் உடல்நலம் மோசமாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பதறிப்போன சத்தியவதி வீட்டை காலி செய்து தலைமறைவாகினார். 

உயிர் பறிபோன பின்பு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி, அவரிடம் ரூ.12 இலட்சம் பணம் மற்றும் 37 சவரன் நகைகளை கொடுத்ததை உறவினர்களிடம் கூறி புலம்பியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சத்தியவதியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pondicherry #India #tamilnadu #Fake Preacher #death #police #arrest #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story