#Breaking: பொங்கலுக்கு விலையில்லா வேஷ்டி - சேலையில் அசத்தல் மாற்றம்; அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு.!
#Breaking: பொங்கலுக்கு விலையில்லா வேஷ்டி - சேலையில் அசத்தல் மாற்றம்; அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு.!
2023 பொங்கல் பண்டிகை விலையில்லா வேஷ்டி சேலையில் கலர், டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு புதிய வேஷ்டி சேலையில் புதிய டிசைன் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கு பின்னர், பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வேஷ்டி சேலையில் புதிய டிசைன் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் வேஷ்டி சேலையில் டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 வண்ணங்கள் (ஊதா, வான நீலம், ஆரஞ்சு, றோஸ், சிகப்பு) கொண்ட வேஷ்டிகள், சேலைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆய்வின் போது அமைச்சர் பெருமக்கள், ஜவுளித்துறை தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 1.80 இலட்சம் ரேஷன் கார்டுக்கு விலையில்லா வேஷ்டி சேலைகள் வழங்கப்படவுள்ளன.