அதிகாலையிலேயே சோக செய்தி.. தாயும், சேயும் பிரசவத்திலேயே துடிதுடித்து மரணம்.!
அதிகாலையிலேயே சோக செய்தி.. தாயும், சேயும் பிரசவத்திலேயே துடிதுடித்து மரணம்.!
காஞ்சிபுரத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தாயும், சேயும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பெருநகர் பழைய காலனி பகுதிச் சேர்ந்த சத்யா என்ற பெண் மானாமதி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அங்கு பிரசவம் நடக்கும் தருணத்திலேயே சிகிச்சை பலனலிக்காமல் தாய், சேய் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தாய் சத்யாவிற்கு மானாமதி அரசு மருத்துவமனை ஊழியர்கள் தவறான சிகிச்சை அளித்த காரணத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.